தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்றை ஈன்றெடுக்க முடியாமல் காட்டு மாடு உயிரிழப்பு! - தேனி மாவட்ட செய்திகள்

தேனி: பெரியகுளம் அருகே சினையாக இருந்த காட்டு மாடு உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

In Theni Pregnant wild cow died
In Theni Pregnant wild cow died

By

Published : May 11, 2020, 9:37 PM IST

தேனி மாவட்டம், பெரியகுளம் கும்பக்கரை அருவி அருகே உள்ள கரடி பொட்டல் எனும் இடத்தில், தனியாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் காட்டு மாடு ஒன்று மர்மமான முறையில் உயரிழந்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற தேவதானப்பட்டி வனத்துறையினர், இறந்த காட்டு மாடு உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் இறந்த காட்டு மாடு சினையாக இருப்பதாகவும், கன்றை ஈன்றெடுக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம் என, முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து, காட்டு மாட்டின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக தேவதானப்பட்டி வனத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க...7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7pm

ABOUT THE AUTHOR

...view details