தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி உத்தமபாளையம் அருகே உள்ள சுருளி அருவியில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிக்க பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அருவியில் இருந்து வரும் நீரின் வேகம் அதிகரித்துவருவதால் அருவியில் இருந்து பாறைகள், கற்கள் விழும் அபாயம் உள்ள காரணத்தால் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.