தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை!

கும்பக்கரை அருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

By

Published : Oct 23, 2022, 4:44 PM IST

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை!
கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்க தடை!

தேனி:பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்புப்பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கானல் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த 17ஆம் தேதி முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்புக்கருதி கும்பக்கரை அருவிக்கு செல்லவும், குளிக்கவும், தேவதானப்பட்டி வனத்துறையினர் தடை விதித்த நிலையில் தொடர்ந்து அவ்வப்பொழுது மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 7ஆவது நாளாக சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கால் குளிக்கத்தடை!

இதனால் தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய மக்கள், அருவியில் குளிக்கமுடியவில்லை என சோகம் அடைந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details