தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழையும், சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலையோர மரங்கள், மின்கம்பங்கள் விழுந்தன. இதனால் கம்பம் பகுதியில் சில இடங்களில் மின் இனைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன.
சூறைக்காற்றினால் வாழை மரங்கள் சேதம்! - Heavy wind
தேனி: கம்பம் அருகே வீசிய பலத்த சூறைக்காற்றால் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டி, காமையகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் வீசிய சூறைக் காற்றுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சாய்ந்து விழுந்தன. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடியான வாழை மரங்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
இறவைப்பாசனம் மூலம் வங்கிகளில் கடன் பெற்று சாகுபடி செய்து வந்துள்ளோம். காய்கள் பூக்கத்தொடங்கிய தருனத்தில் நேற்று ஏற்பட்ட சூறைக்காற்றினால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.