தேனி:பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துபாறை அணையில் நேரடி பாசனமாக 2,865 ஏக்கர் நிலங்கள் உள்ளது. அதில் 1,500 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் புதர் மண்டி, பல இடங்களில் மண் சரிந்து நீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஆயக்கட்டு வாய்க்கால் பணி- விவசாயிகள் தூர்வாரும் பணியில் தீவிரம்! அடுத்த மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில் திறக்கப்படும் நீர் கடைமடை வரை செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் புதிய ஆயக்கட்டு விவசாயிகள் ஒன்றிணைந்து வாய்க்காலில் அடர்ந்து படர்ந்துள்ள புதர்களை அகற்றியும், வாய்க்காலில் சரிந்துள்ள மண்மேடுகளை அகற்றி தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஆண்டுதோறும் நீர் திறப்பதற்கு முன்பாக பாசன விவசாயிகள் ஒன்றிணைந்து வாய்க்காலில் ஏற்பட்டுள்ள புதர்கள் மற்றும் மண்ணை அகற்றுவதற்கு குறைந்தது 10 நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிலையால் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ்நாடு அரசு பாசன வாய்க்காலில் பக்கவாட்டு சுவரை 3 அடி உயரம் உயர்த்தி கட்டி மண் சரிவு மற்றும் வாய்க்காலில் செடி, கொடிகள் படர்வதை நிரந்தரமாக தடுப்பதற்கு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வரும் 29ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்