தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அவனியாபுரம் கொலை வழக்கு: இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் சரண் - அவனியாபுரம் கொலை வழக்கு

திண்டுக்கல்: அவனியாபுரம் கொலை சம்பவம் தொடர்பாக இளைஞர் ஒருவர் பழனி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

palani-court
palani-court

By

Published : Mar 11, 2020, 1:00 PM IST

மதுரை அவனியாபுரம் பெரியார் நகரில் மார்ச் 6ஆம் தேதி தலையில்லாமல் கிடந்த இளைஞர் ஒருவரின் உடலைக் கைப்பற்றி, அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர். உடலில் தலையில்லாததால், கொலை செய்யப்பட்ட நபர் யார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில், அக்கொலை சம்பவம் தொடர்பாக ரஞ்சித்குமார் (24) என்பவர் பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பழனி நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து நீதிபதி ரகுபதி ராஜா, குற்றவாளியை 14 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அவரிடம் பழனி காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மது போதையில் நண்பர்களுடன் கொலை செய்ததாகவும், போதையில் யாரை கொலை செய்தோம் என தெரியவில்லை எனக் கூறியுள்ளார். அடுத்தக் கட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ஆட்டோ ஓட்டுனர் வெட்டிப் படுகொலை!

ABOUT THE AUTHOR

...view details