தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் விநோதத் திருவிழா! - ஆண்டிப்பட்டி

தேனி: சித்திரைத் திருவிழாவையொட்டி, ஒருவரையொருவர் மாறி மாறி அடித்துக்கொள்ளும் விநோத நிகழ்ச்சி மறவட்டி பகுதியில் நேற்று நடைபெற்றது.

ஒருவரையொருவர் அடிக்குக்கொள்ளும் நிகழ்ச்சி

By

Published : May 2, 2019, 9:13 AM IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் முத்தாலம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 30ஆம் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து காப்புக் கட்டி, தீச்சட்டி, பால்குடம் மற்றும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம். பெண்கள் முளைப்பாரி, மாவிலக்கு எடுத்து வந்து அம்மனை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக மாமன் மச்சான்கள் இடையே ஏற்பட்டுள்ள விரிசல்களைத் தவிர்க்கவும், உறவுகள் வலுப்பெறவும் ஒருவரையொருவர் துடைப்பத்தால் அடித்துக்கொள்ளும் விநோத திருவிழா நேற்று நடைபெற்றது.

ஒருவரையொருவர் அடிக்குக்கொள்ளும் நிகழ்ச்சி

இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலத்தில் உள்ள உறவினர்கள் அனைவரும் இங்கு ஒன்று சேர்வார்கள். கோயில் வளாகம் முன்பாக
அனைவரும் ஒன்றுகூடி அம்மனை வழிபட்டு சேத்தாண்டி வேடமிட்டு, ஒருவரை ஒருவர் துடைப்பத்தால் மாறி மாறி அடித்துக்கொள்வர்.

தொன்றுதொட்டு கொண்டாடப்படும் இந்நிகழ்வினால் உறவுகளிடையே ஒற்றுமை வலுப்பெறும் என்பது நெடுங்காலமாக இருந்துவரும் ஐதீகம் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர். வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் இத்திருவிழா எங்கள் ஊரின் பெருமை என்கின்றனர் அப்பகுதி இளைஞர்கள்.

ABOUT THE AUTHOR

...view details