டயர் வெடித்து விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - CCTV Footage
தேனி: ஆண்டிப்பட்டி நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில், 5 பேர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
![டயர் வெடித்து விபத்து: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3941754-988-3941754-1564047814086.jpg)
accident
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட உரிமையியல், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த தினேஸ்குமார் என்பவர் காரில் தேனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற நுழைவு வாயில் முன்பாக, டயர் வெடித்ததில் கட்டுபாட்டை இழந்த கார், நீதிமன்ற பலகையை உடைத்து நுழைவுவாயிலில் நின்றிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி