தேனி: கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு பலதரப்பட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இச்சூழலில் தேனி மாவட்ட சிவசேனா கட்சியைச்சேர்ந்தவர்கள் ஆ. ராசாவின் உருவ பொம்மையை தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தேனி நேரு சிலை முன்பாக ஊர்வலமாக எடுத்து வந்து, அதனை தீ வைத்து எரிக்க முயன்றனர்.
இந்த நிலையில் பாதுகாப்புக்காக அங்கு நின்ற காவல்துறையினர் அவர்களிடமிருந்து உருவ பொம்மையை பறிக்க முயற்சி செய்தனர். இதனால் காவல் துறை மற்றும் சிவசேனா கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் கட்சியினரிடம் இருந்த உருவ பொம்மையை காவல்துறையினர் பறித்துச் சென்றனர்.
இந்துக்களை இழிவாகப்பேசியதாக ஆ. ராசாவின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி இதனையடுத்து சிவசேனா கட்சியினர், தேனி நேரு சிலை முன்பாக ஆ.ராசாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் தேனி நேரு சிலைப்பகுதி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காரில் கடத்தப்பட்ட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்... 5 பேர் கைது...