தமிழ்நாடு அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்றச் சங்கத்தின் மேற்கு மண்டல உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று (டிச. 14) தேனியில் நடைபெற்றது. தேனி அருகே குன்னூர் பகுதியில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் செந்தில்குமார் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கினார்.
ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் - சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது - Athi Dravider
தேனி: ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் சிறப்பாகச் செயல்படுபவர்களுக்குப் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரில் விருது வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அம்பேத்கர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது தெரிவித்தார்.
![ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் - சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது pressmeet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9881455-541-9881455-1607997380174.jpg)
pressmeet
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைக் குறைந்தது 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு கல்வி சார்ந்த ஆய்வு அலுவலர்களாக 10 மண்டல உதவி இயக்குநர் பணியிடங்களை உருவாக்கித் தர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். தலைமை ஆசிரியர்கள், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கியதைப் போல பட்டதாரி ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் விருப்ப மாறுதல் வழங்கிட வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகள் - சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விருது
நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு ஆதிதிராவிடர் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் கணிப்பொறி ஆசிரியர் பதவி உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.