தேனி:ஆண்டிப்பட்டியில் அமைந்திருக்கும் 500ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னதாக ஆலய வளாகத்தில் அமைந்திருந்த யாகசாலையில், யாக குண்டங்கள் அமைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தினர். பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட கலச நீரை வேதச்சாரியர்கள் தலையில் சுமந்து கொண்டு விமான கலசத்தை அடைந்தனர்.
ஆண்டிப்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
தொடர்ந்து, கோபுர கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கலச நீரை ஊற்றி தீபாராதனை காட்டி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின் ஆலயத்தைச் சுற்றி கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கும்பாபிஷேக நிகழ்ச்சியைக் கண்டுகளித்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: GIS2023: உ.பி.யில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு - பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!