தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மறவபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன்(45), சிவபாண்டி(26) ஆகியோருக்கிடையே சூதாட்டம் ஆடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை மனதில் வைத்த சிவபாண்டி கடந்த 2009ஆம் ஆண்டு ராஜேந்திரனின் மகன் ரஞ்சித்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
அதில் படுகாயமடைந்த ரஞ்சித்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் சிவபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.