தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல் ஆளாக மாலை அணிவிப்பேன்" - அந்தர்பல்டி அடித்த திமுக எம்எல்ஏ! - ஆண்டிபட்டி

தேனி: ஆண்டிபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தால் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன் என்று ஆண்டிபட்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ மகாராஜன் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ மகாராஜன்

By

Published : Aug 30, 2019, 10:14 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மகாராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, "மதுரை, திண்டுக்கல் மாவட்ட விவசாயத்திற்காக முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணைகளில் இருந்து தண்ணீரை திறக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஆண்டிபட்டி சட்டமன்றத்தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆண்டிபட்டி மக்களின் நீண்டநாள் திட்டமான முல்லைப்பெரியாறு வாய்க்கால் திட்டம் நிறைவேற்றப்படும் என்று எந்த மேடையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிக்கிறாரோ... அந்த மேடையில் அவருக்கு தான் முதல் ஆளாக மாலை அணிவிப்பேன்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details