தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலகலத்துப் போகவில்லை கலகலப்புடன் இருக்கிறோம் -டிடிவி தினகரன் - ammk party meeting in theni

தேனி: எங்கள் இயக்கம் கலகலத்துப் போகவில்லை கலகலப்புடன் இருக்கிறோம் இன்னும் ஐந்து தேர்தல்கள் வந்தாலும் அதனைச் சந்திக்கும் வல்லமை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இருக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ammk ttv dinakaran

By

Published : Oct 4, 2019, 11:39 AM IST

தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கட்சியிலிருந்து பதவிக்கு ஆசைப்பட்டு, பார் டெண்டருக்கு ஆசைப்பட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டனர். நமது கட்சியில் கொள்கை பரப்புச்செயலாளராக இருந்தவர் விஸ்வரூபம் எடுப்பதாக கூறி வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்.

நம்மால் உருவானவர்கள் தற்போது நம்மை எந்த ஊர் என்று கேட்கிறார்கள். விரைவில் நாம் அதிமுகவை மீட்டெடுப்போம். நிச்சயம் இந்த இயக்கத்தை ஆட்சிக்கட்டிலில் ஏற்றுவோம்.

சிலர் 'இந்த இயக்கம் கலகலத்துப் போய்விட்டது' என்று கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் கலகலத்துப் போகவில்லை கலகலகப்பாக இருக்கிறோம் இன்னும் ஐந்து தேர்தல்கள் வந்தாலும் அதனைச் சந்திக்க இந்த இயக்கம் தயாராக இருக்கிறது.

ஐந்து தேர்தல்களைச் சந்திக்கும் வல்லமை அமமுகவிற்கு இருக்கிறது-டிடிவி தினகரன் பேச்சு

' நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஏன் நிற்கவில்லை' என்ற கேள்வியை தற்போது எழுப்புகிறார்கள். நாங்கள் விரைவில் நிலையான சின்னம் பெற்று வருகின்ற பொதுத்தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியைப் பிடிப்போம்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் வந்தால் அதில் மாபெரும் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும். தேனி மாவட்ட மக்கள் என்னை தங்கள் வீட்டுப்பிள்ளையாகவே இன்றும் நினைத்து வருகிறார்கள். " என்றார்.

இதையும் படிங்க:அதிமுக நோக்கி தொடரும் அமமுக தொண்டர்களின் பயணம்

ABOUT THE AUTHOR

...view details