நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல், 22 தொகுதிகளுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக, திமுகவில் தங்களை இணைத்து வருகின்றனர்.
அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் ஐக்கியம் - admk
தேனி: பெரியகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் அக்கட்சியில் இருந்து விலகி துணை முதலமைச்சர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
![அமமுகவினர் 100 பேர் அதிமுகவில் ஐக்கியம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3771753-thumbnail-3x2-hg.jpg)
அமமுகவினர் 100பேர் ஒபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்
இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெயமங்கலம், சில்வார்பட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த அமமுக ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி இன்று அதிமுகவில் இணைந்தனர்.
அமமுகவினர் 100பேர் ஒபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்