தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - தந்தையுடன் சென்ற மகள் உயிரிழப்பு - தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த மணி

தேனி அருகே தந்தையுடன் உதவிக்காக 108 ஆம்புலன்ஸில் சென்ற மகள் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Etv Bharatதேனியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - தந்தையுடன் சென்ற மகள்  உயிரிழப்பு
Etv Bharatதேனியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - தந்தையுடன் சென்ற மகள் உயிரிழப்பு

By

Published : Nov 19, 2022, 10:21 AM IST

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணி என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் மணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். இந்த ஆம்புலன்சில் மணிக்கு உதவியாக அவரது மகள்கள் ஜெயா மற்றும் விஜயா ஆகியோர் உடன் சென்றனர்.

108 ஆம்புலன்ஸ் தேனி அருகே உள்ள முத்து தேவன் பட்டி பகுதிக்கு வரும்போது திடீரென நிலை தடுமாறி தலை குப்புறவாக கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆம்புலன்ஸில் இருந்தவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்டவர்கள் உடனடியாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் மணியின் மகள் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரியா மரணம்: மாணவிக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details