தேனி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இன்று (அக். 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டியிட்டு நூதன போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாவது:
- அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் துணைவேந்தர் சூரப்பாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்,
- திண்டுக்கல் முடி திருத்தும் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்,
- மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைப் பறிக்கக் கூடாது ஆகியவையாகும்.