தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அகில இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அபார வெற்றி! - சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றி

தேனி: பெரியகுளத்தில் அகில இந்திய அளவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை இந்தியன் வங்கி அணி வெற்றிபெற்றுள்ளது.

அகில இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை வெற்றி!

By

Published : May 22, 2019, 10:29 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அமரர் சிதம்பரம் சூரியநாராயணன் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான கூடைப் பந்தாட்ட போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம்.

இந்த வருடம் 60ஆவது ஆண்டு வைரவிழா கொண்டாட்டத்துடன் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. பெரியகுளம் பி.டி.சி. மைதானத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் நடைபெற்றது.

அகில இந்திய அளவில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய தரைப்படை, விமானம், கப்பல் படை, இந்தியன் ரயில்வே தெற்கு, கேரள மின்வாரியம், சுங்கத்துறை, பெங்களூரு விஜயா வங்கி, போபால், வாரணாசி, செகந்திராபாத், தெலங்கானா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய அளவிலான 24 அணிகள் பங்கேற்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாங்க் ஆஃப் பரோடா பெங்களூரு, சென்னை இந்தியன் வங்கி அணிகள் களம் கண்டன. ரசிகர்களின் ஆரவாரத்தோடு விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் பெங்களூரு பாங்க் ஆஃப் பரோடா அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 98-க்கு 61என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது. வெற்றிபெற்றஅணிக்கு நினைவுப்பரிசுடன் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது.

அகில இந்தியா கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை வெற்றி!

மேலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையுடன் சிறப்புப் பரிசுகளும் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி தலைவர் பி.டி.சி. சூரியவேல் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details