மத்திய பாஜக அரசு தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கடந்த திங்கட்கிழமை இரு அவைகளிலும் அமல்படுத்தி நிறைவேற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கைத் தமிழர்களையும் புறக்கணித்துக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு இரண்டும் இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரானதாகும் என்று நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடந்துவருகிறது.
இந்நிலையில் இந்தக் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி தேனி மாவட்டம் சின்னமனூரில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சின்னமனூர் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தங்களது முகத்தில் கருப்பு துணி கட்டியபடி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.