தேனி:அதிமுகவில் சமீபகாலமாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மற்றொருபுறம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களால் ஒட்டப்படும் போஸ்டர்கள் மிகப்பெரிய கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றன. அதிமுகவின் ஒற்றை தலைமை, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட விவாதங்களையும் பங்களிப்பையும் ஏற்படுத்தும் விதமாக இருதரப்பு ஆதரவாளர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.
இந்த போஸ்டர்கள் யுத்தம் தற்போது நின்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கட்சியில் மீண்டும் விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் விரைவில் அதிமுகவில் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்ற உள்ள எடப்பாடி பழனிசாமியை வாழ்த்துகிறோம் என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் பெரியகுளம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.