திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மைடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் இன்று அதிகாலை ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ் பெருங்குடி மக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள். மக்கள் எங்களை ஜனநாயக கடமையாற்றிடப் பணித்திருக்கிறார்கள்.