தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயண தேவன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் வயது (61). உறவினரின் இறுதிச் சடங்கிற்கு சென்றவர் முல்லை ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். ஆனால் முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வெள்ள நீர் அவரை இழுத்துச் சென்றதாக தெரிகிறது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் முத்துக்கருப்னை தேடும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முல்லை ஆற்றிலிருந்து தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் குறைந்த சமயத்தில் மீட்புப் பணிகள் துவக்கப்பட்டது. இந்நிலையில் முத்துக்கருப்பனின் உடலானது உத்தமபாளையம் அருகில் உள்ள கோகிலாபுரம் ஆற்றில் கரையில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.