தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை, அகமலை ஊராட்சி ஆகியவை போடி சட்டப் பேரவைக்கு உட்பட்டதாகும். அதில் ஊத்துக்காடு, கரும்பாறை, பெரியமூங்கில், சின்னமூங்கில், பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட மலைக் கிராமங்கள் உள்ளன.
அங்குள்ள மலைவாழ் மக்கள் மிளகு, காபி, ஏலக்காய், பலா, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவற்றை சொந்த பட்டா, அனுபவ பட்டா நிலங்களில் பயரிட்டு வருகின்றனர். இந்த நிலையில், அப்பகுதி மக்கள், தங்களது பட்டா நிலங்களில் விவசாயம் செய்ய விடாமல் தடுத்தும், மலைப்பகுதியை விட்டு வெளியேறுமாறும் வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி வருவதாகத் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (அக்.15) பெரியகுளம் கைலாசபட்டியில் உள்ள துணை முதலமைச்சர்ஓ. பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் அவரை நேரில் சந்தித்து, அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.