தேனி :நீட் தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீத் கடந்த 7ஆம் தேதி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜரான அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இதனிடையே வழக்கின் முக்கிய குற்றவாளியான ரசீத்தை ஒரு வாரம் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்ற நீதிபதி 3 நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, 8ஆம் தேதி ரசீத்தை மதுரை அலுவலகத்திற்கு சிபிசிஐடி காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றம் வழங்கிய விசாரணை அனுமதிக்குப் பின்னர், இடைத்தரகர் ரசீத் இன்று மீண்டும் தேனி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சிபிசிஐடி காவல் துறையினரால் ஆஜர்படுத்தப்பட்டார்