தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி அருகே 29 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய்.. விவசாயிகள் மகிழ்ச்சி..! - கண்மாய்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் உள்ள சிகு ஒடை கண்மாய் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

தேனி
தேனி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 10:24 PM IST

தேனி அருகே 29 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய்.. விவசாயிகள் மகிழ்ச்சி..!

தேனி: ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்களில் உள்ள அணைகள் மற்றும் கண்மாயில் நிரம்பி வருகின்றது.

இந்த நிலையில் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கிராமத்தில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது சிகு ஒடை கண்மாய். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கண்மாய் சுமார் 110 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த கண்மாய்க்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து நீர் வரத்து வந்து கொண்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையின் காரணமாக இந்த கண்மாயில் நீர் வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் சிகு ஓடை கண்மாய் மூலம் வாய்க்கால் வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு சிகு ஓடை கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், சிகு ஓடை கண்மாய் கரையில், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கண்மாய் நீரில் பூக்களைத் தூவி வரவேற்றனர். மேலும் தண்ணீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புகளில் புகுந்து வருகிறது.

இதனால் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தூர்வார வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிகழ்வில், சிறு ஓடை கண்மாய் நீர்ப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், விவசாயச் சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:இந்திய ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு! வீரர்கள் உயிரிழப்பு? என்ன நடந்தது?

ABOUT THE AUTHOR

...view details