தேனி: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை கோரிக்கையும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு; ஆகையால் ஓபிஎஸ் தான் ஒற்றைத் தலைமையினை வகிக்க வேண்டும் என அதிமுகவில் சர்ச்சைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆரின் கையெழுத்துடன்கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த சுவரொட்டிகளில், 'அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் அவர்களின் கழக சட்ட விதிப்படி தொண்டர்களே கட்சியின் தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என்ற விதி முறைகளை தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்ற முயற்சிக்கும் தீய சக்திகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.