தமிழ்நாடு

tamil nadu

தேனியில் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை!

தேனி: ஆண்டிபட்டி அருகே திமுகவிலிருந்து அதிமுகவிற்கு மாறிய ஒன்றிய கவுன்சிலர் விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவர் இன்று (ஜன. 02) உயிரிழந்தார்.

By

Published : Jan 2, 2021, 3:40 PM IST

Published : Jan 2, 2021, 3:40 PM IST

தேனியில் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை
தேனியில் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குள்பட்ட முத்தாலம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (36). இவர் ஒன்றிய கவுன்சிலராக திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தமிழ்செல்வனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உறவினர்கள் சேர்த்தனர்.

விஷம் குடித்த கவுன்சிலர் உயிரிழப்பு

அங்கு, தீவிர சிகிச்சையிலிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று (ஜன. 02) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கடமலைக்குண்டு காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தற்கொலை எதற்கும் முடிவல்ல...

முதற்கட்ட விசாரணையில், மதுப்பழக்கத்தால் உண்டான வயிற்று வலியால் அவதியுற்றுவந்த தமிழ்செல்வன், வலி தாங்காமல் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்தது.

மேலும், கடன் தொல்லையால் மன உளைச்சலிலிருந்த அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மிரட்டலுக்கு பயந்து கடிதம் எழுதிவைத்துவிட்டு முதியவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details