இதனையடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்காத தமிழ்நாடு அரசைக் கண்டித்து இன்று திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மழை பெற வேண்டி அதிமுக சார்பில் யாக பூஜை! - ADMK
தேனி: திமுகவிற்கு போட்டியாக வறட்சியை போக்குவதாக மழை பெற வேண்டி அதிமுக சார்பில் பூஜை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் தலைமையில் மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்திட வேண்டும் என முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூட்டறிக்கை விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து பகுதிகளிலும் உள்ள முக்கிய கோயில்களில் அதிமுக சார்பில் சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது.மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற இந்த யாக பூஜையில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஜக்கையன், ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் கலந்துகொண்டனர்.