தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியகுளம் அருகே பொங்கல் பரிசு டோக்கனை பறித்த அதிமுக நிர்வாகி; பொதுமக்கள் எதிர்ப்பு - thamaraikulam pongal price tocken

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் நியாயவிலை கடை ஊழியர்கள் விநியோகித்த பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக நிர்வாகி பறித்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

thamaraikulam pongal price tocken
பெரியகுளம் அருகே பொங்கல் பரிசு டோக்கனை பறித்த அதிமுக நிர்வாகி; பொதுமக்கள் எதிர்ப்பு

By

Published : Dec 27, 2020, 11:32 PM IST

தேனி:தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை 2,500 ரூபாய் வழங்குவதற்கான டோக்கன்கள் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் நியாயவிலை கடை ஊழியர்களால் இன்று (டிசம்பர் 27) பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன.

பெரியகுளம் அருகே பொங்கல் பரிசு டோக்கனை பறித்த அதிமுக நிர்வாகி; பொதுமக்கள் எதிர்ப்பு

அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டதால் நாங்கள் இல்லாமல் எப்படி டோக்கனை விநியோகிக்கலாம் என அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி சந்தோசம், நியாயவிலைக் கடை ஊழியரிடம் இருந்து மொத்தமாக பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அதிமுக நிர்வாகியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அதிமுக நிர்வாகி வைத்திருந்த டோக்கனை பெற்று நியாயவிலைக் கடை ஊழியர் மூலம் நேரடியாக மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற டோக்கன் விநியோகம்

ABOUT THE AUTHOR

...view details