தேனி:அதிமுக உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பொதுக்குழு கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் அணியினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இருப்பினும் நாளை(ஜூலை 11) பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? அல்லது ரத்து செய்யப்படுமா ?என நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரே தெரியவரும்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டு உள்ளனர். ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்திலிருந்து அதிமுக பொதுக்குழு சென்னை செல்வதற்காக 26 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பொதுக்குழுவிற்கு புறப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள்- ஆட்கள் குறைந்ததால் வேனாக மாறிய பேருந்து ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர் பலர் சென்னை செல்ல விரும்பாததால் பேருந்துகளுக்கு போதிய ஆட்கள் இல்லை என தெரிகிறது. இதனையடுத்து பேருந்து ரத்து செய்யப்பட்டு வேன் ஏற்பாடு செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்திலிருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட வேன்கள் மூலம் அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்க்கு ஆதரவாக சென்னை சென்றனர். நீதிமன்றம் பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கும் பட்சத்தில் அந்தக் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் - ன் ஆதரவு தூண்கள் யார்?