தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்ஸை தொட்டு பார்க்கட்டும்..!’ - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்! - ஆர் பி உதயகுமார்

”தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்ஸை தொட்டு பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டுச் சென்று பார்க்கட்டும்” என்று ஆர்.பி. உதயகுமாருக்கு அதிமுக தேனி மாவட்டச்செயலாளர் சையது கான் சவால் விடுத்துள்ளார்.

’தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்-ஐ தொட்டு பார்க்கட்டும்..!’ - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்
’தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்-ஐ தொட்டு பார்க்கட்டும்..!’ - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்

By

Published : Jul 28, 2022, 6:02 PM IST

தேனி:இரண்டு நாட்களுக்கு முன்பு தேனியில் அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடிய ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை சூறையாடுவதற்கு வெகு நேரம் ஆகாது என்றும்; ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு தேனி மாவட்டத்தில் செல்வாக்கு இல்லை என்றும்; அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதற்குப்பதில் அளிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தேனி மாவட்டச்செயலாளர் சையது கான் இன்று(ஜூலை 28) செய்தியாளர் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது பேசிய அவர், “ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு செல்வாக்கு இல்லை என்று சொல்கிறவர்கள் முதலில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். அப்போது நாங்கள் இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறோம்.

ஆர்.பி.உதயகுமார் தைரியமான ஆண் மகனாக இருந்தால் ஓபிஎஸ்ஸின் வீட்டைத்தொட்டுப்பார்த்துவிட்டு தேனி மாவட்டத்தை விட்டுச் சென்று பார்க்கட்டும்” என்று சையது கான் ஆவேசமாகப் பேசினார்.

’தைரியமான ஆண்மகனாக இருந்தால் ஓபிஎஸ்ஸை தொட்டு பார்க்கட்டும்..!’ - ஓபிஎஸ் ஆதரவாளர் சவால்!

இதையும் படிங்க: 'துரோகத்தின் மொத்த உருவம்' - ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் அவரை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details