தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க பெரியகுளம் பண்ணை வீட்டில் குவிந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள்!

தேனி: பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கியுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சென்னை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர்.

By

Published : Oct 3, 2020, 6:54 PM IST

panner selvam farm house
ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க பெரியகுளம் பண்ணை வீட்டில் குவிந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் சில நாள்களாக அரசு விழாவை புறக்கணித்த துணை முதலமைச்சர் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வருகின்ற 7ஆம் தேதி அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 6ஆம் தேதி சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின.

ஓ. பன்னீர் செல்வத்தை சந்திக்க பெரியகுளம் பண்ணை வீட்டில் குவிந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள்

இந்நிலையில், தனது பேரனின் பிறந்தநாள் விழாவிற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றிரவு சொந்த ஊரான தேனிக்கு வந்திருந்தார். பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்றுவிட்டு கைலாசபட்டி பண்ணை வீட்டில் நேற்றிரவு தங்கினார். துணை முதலமைச்சரின் வருகையை அறிந்த அதிமுகவினர் இன்று காலையிலிருந்து அவரை சந்திப்பதற்காக பண்ணை வீட்டில் குவிந்தனர்.

இதில், தேனி மாவட்ட அதிமுகவினர் மட்டுமின்றி சென்னை, திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அவரை சந்தித்து வருகின்றனர். தன்னை சந்திக்க வரும் அதிமுகவினரிடம் கட்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து காலையில் இருந்து நடைபெற்று வரும் இந்த சந்திப்பு மாலை, இரவு வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற மோதல் நிலவி வரும் சூழலில், தற்போது துணை முதவ்வரை அதிமுக நிர்வாகிகள் சந்தித்து வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க:தலைமைக் கழகத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை- முற்றுகிறதா ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல்?

ABOUT THE AUTHOR

...view details