தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறவிருந்த எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய 30க்கும் மேற்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்ட போராளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதனைக் கண்டித்து நேற்றிரவு அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவ்வேளையில் இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக, பாஜகவினர் தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓபிஎஸ் மகன் ஓபிஆர் எம்.பி.க்கு எதிராக இஸ்லாமியர்கள் கருப்புக் கொடி; காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காந்திசிலை அருகில் இருந்து ஊர்வலமாக வந்த அதிமுகவினர், தென்கரையில் உள்ள ரவீந்திரநாத்குமாரின் அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் வாகனத்தை வழிமறித்து கருப்புக் கொடி காட்டியும், அவரை முற்றுகையிட்ட போராட்டகாரர்களைக் கைது செய்யக்கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பல்வேறு இடங்களில் அதிமுகவினர் சாலை மறியல் சம்பவ இடத்திற்கு வந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி மறியலில் ஈடுட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இதே போல தேனி பழைய பேருந்து நிலையம், போடி பேருந்துநிலையம், கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அதிமுகவினரும், பாஜகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.