மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
ஜியோ வேண்டாம், ஏர்டெல் சிம் போதும்! - ஆதித்தமிழர் பேரவை நூதன போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தேனியில் ரிலையன்ஸ் - ஜியோ சிம், மொபைல்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் பேரவையினர், ஜியோ சிம் இல் இருந்து ஏர்டெலுக்கு மாறினர்.
ஜியோ சிம் கார்டுகள் மற்றும் மொபைல் போன்களை சாலையில் தூக்கி எறிந்து போராட்டம்
இந்நிலையில் தேனி, அல்லிநகரம் பகுதியில் ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி ரிலையன்சின் ஜியோ நிறுவன பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க:வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்!