தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள இவர் தமிழ் திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழ்கிறார். விஜய்க்கு பிறந்தநாள் என்றாலே ரசிகர்கள் அதகளம் செய்வார்கள். கடந்த ஜூன் 22ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று மதுரை ரசிகர்கள் ஒட்டிய "வாங்கய்யா வாத்தியாரய்யா" என்ற போஸ்டர் பட்டிதொட்டியங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் கருத்துகள் நிறைந்த படத்தில் விஜய் நடித்து வருவதால் அவரது படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் எழுகிறது. தலைவா படத்திலிருந்து சர்கார் படம் வரை இந்த சிக்கலை சந்தித்து வருகிறார். இருப்பினும் அவருக்கு பக்கபலமாக அவரது ரசிகர்கள் எதிர் கருத்து தெரிவித்து விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில், விஜய் ரசிகர்கள் மதுரையில் ஆரம்பித்துள்ள விளம்பர கலாச்சாரம் தமிழ்நாடு முழுவதும் தொற்றிக்கொண்டுள்ளது.
ஊரே கரோனாவால் முடங்கி கிடக்கும் வேலையில், பொழுதுபோக்குக்கே வழியில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் கல்யாண நாளன்று, விஜயை எம்ஜிஆராகவும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவாகவும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்று போஸ்டர் அடித்து சிரிப்பலையை ஏற்படுத்தினர். அதிமுகவினரையும் வியக்க வைத்தனர்.