தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டுவந்த இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை - தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

தேனி: கம்பத்தில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞரை ஆட்சியர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

கைது செய்யபட்ட ராஜ்குமார்
கைது செய்யபட்ட ராஜ்குமார்

By

Published : Sep 18, 2020, 4:47 PM IST

தேனி மாவட்டம் கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் ராஜ்குமார்(33). இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி கோம்பை சாலையில் சட்டவிரோதமாக ஒரு யூனிட் ஓடை மணலை திருடிக் கொண்டு வரும் போது காவல்துறையினரை கண்டதும் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

ஓடை மணலுடன் கூடிய டிராக்டரை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்த கம்பம் வடக்கு காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றாவாளி ராஜ்குமாரை கைது செய்து உத்தமபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட குற்றவாளி இது போல தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்ட வழக்கு இருப்பதால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரை செய்தார்.

அதன்படி ராஜ்குமாரை குண்டர் தடுப்புக்காவலில் வைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜ்குமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இதுபோன்று மணல் திருட்டில் ஈடுபடுவபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details