தமிழ்நாடு

tamil nadu

முல்லை பெரியாறு திட்டத்தை செயல்படுத்துவோம்: திமுக வேட்பாளர் மகாராஜன் உறுதி!

By

Published : Apr 2, 2019, 6:13 PM IST

தேனி: ஆண்டிபட்டி வறட்சியைப் போக்க முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்திடுவோம் என ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் மகாராஜன் வாக்குறுதியளித்துள்ளார்.

திமுக வேட்பாளர் மகாராஜன்

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் இந்த மாதம் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் 18 சட்டமன்றத் தொதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

ஆண்டிபட்டி திமுக வேட்பாளர் மகாராஜன்

இந்நிலையில், ஆண்டிபட்டி தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.மகாராஜன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முல்லை பெரியாறு வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்தி ஆண்டிபட்டிக்கு தெற்கே உள்ள 152 கிராமங்களை பயனைடைய செய்வேன். ஆண்டிபட்டி தாலுகா நெசவாளர்களின் துயர் துடைக்க உயர் தர நெசவு ஜவுளி பூங்கா திட்டத்தை செயல்படுத்தி உழவு, நெசவு மேம்பட பாடுபடுவேன் என தேர்தல் வாக்குறுதியளித்தார்.

தொகுதியின் வளர்ச்சிக்காக வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் மூலம் லட்சுமிபுரம், புதூர் மற்றும் பெருமாள்பட்டி ஆகிய இடங்களில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அப்பகுதி விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் பாசன வசதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உறுதியளித்தார்.

அதேபோல், தான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனக்கு வழங்கப்படும் மேம்பாட்டு நிதியை தொகுதியின் தேவை அறிந்து வளர்ச்சிக்காக செயலாற்றிடுவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details