ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. இந்த சூழலில் ஆண்டிபட்டியில் இருக்கும் அமமுக அலுவலகத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து ஒரு கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுடையது: ஆண்டிபட்டி அமமுக வேட்பாளர் - அதிமுக
தேனி: ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது என அத்தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதனால் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தானது போல் ஆண்டிபட்டியிலும் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், ஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து அத்தொகுதியின் அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், “ அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதாக நாங்கள்தான் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், காவல்துறையினர் அதிமுகவினரை காப்பாற்ற எங்கள் பணம் என கூறுகின்றனர். அமமுகவிடம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் உண்மையில் அதிமுகவினருடையது” என்றார்.