சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் போக்சோ சட்டத்தில் கைது!
தேனி: ஆண்டிபட்டி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
மதுரை ஒத்தக்கடைப் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் நாகராஜ் (27). இவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜகோபலான்பட்டியில் உள்ள கல்குவாரியில் வேலைசெய்து வருகின்றார்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது ஆறு மாத கர்ப்பமாக உள்ளதாக, அவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர், நாகராஜை இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
மேலும், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.