தேனிஅருகேபெரியகுளத்தில் 'ஜாமிஆ அல்-அஷரத்துல் முபஷ்ஷரா' என்ற பெயரில் இறையியல் கல்லூரி நடைபெற்று வருகிறது. இந்த இறையியல் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் இஸ்லாமிய இறையியல் குறித்து பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த இறையியல் கல்லூரியில் 'திருக்குர்ஆன்' புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் கற்றுத் தந்து வருகின்றனர்.
இதில் 'திருக்குர்ஆன்' என்பது 30 பாகங்களாக கொண்டு 114 அத்தியாயங்களில் 6,666 வசனங்கள் கொண்டதாக மனித குலத்திற்கு தேவையான அனைத்து நல் விஷயங்களையும் இந்த திருக்குர்ஆன் கூறுகின்றது. இந்த இறையியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த திருக்குர்ஆனின் அனைத்து பாகங்களிலும் உள்ள அனைத்து வசனங்களையும் கற்றுத் தேர்ந்து பட்டம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கல்லூரியில் பயின்று வரும் பெரியகுளத்தைச் சேர்ந்த அஜீஸ் ரஹ்மான் என்பவருடைய மகன் 'அமானுல்லாஹ்' என்பவர், இந்த திருக்குர்ஆன் முழுவதையும் மனப்பாடம் செய்து ஒரே மேடையில் தொடர்ந்து பத்து மணி நேரத்தில் திருக்குர்ஆன் புத்தகத்தை பார்க்காமல் மனப்பாடமாக 6666 வசனங்களையும் ஓதினார்.