தேனி: அதிமுகவில் தனி ஒரு குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாது. கட்சியை யாரும் கைப்பற்ற முடியாது. ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்திற்கு அடுத்தமுறை நானே நேரடியாக ஆஜராவேன் என ஓபிஎஸ் தெரி
அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக அதிமுகவினர் தங்களின் வார்டுகளில் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு அக்கட்சி தலைமை அறிவித்தது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது சொந்த தொகுதியான போடிநாயக்கனூரில் உள்ள அவரது அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் போடி நகர், பேரூர் அதிமுக உறுப்பினர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில், அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் தடை இல்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது.
திமுக தேர்தலில் 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் மக்களின் முக்கிய பிரச்னைகளில் இருந்து பின் வாங்குகிறது. நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு 1,000 ரூபாய் நிவாரண தொகை என எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
கரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது என பிரதமரால் பாராட்டுப் பெற்றது. ஆனால், தற்போது கரோனா மரணங்கள் மறைக்கப்படுகின்றன. மேகதாது அணை பிரச்னை, காவிரி நீரை மறித்து அணை கட்டக்கூடாது என்ற நிலை உள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் சேர்ந்து கட்சியை வழிநடத்திக் கொண்டு இருக்கிறோம் என்றார்.