தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்க நாயக்கனூரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்த சம்பவத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் சிறுமி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தீ வைத்து எரித்த வழக்கு.... சிறுமி உயிரிழப்பு - மதுரை அரசு மருத்துவமனை
தேனி அருகே ஏழு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்ததில் படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தற்கொலையை வீடியோ எடுத்த பாடகர் உயிரிழப்பு... திருமணத்தை மீறிய உறவால் நேர்ந்த கொடுமை