தேனி மாவட்டம் சின்னமனூர் - உத்தமபாளையம் சாலையில் உள்ள துர்க்கையம்மன் கோவில் அருகே தனியார் பேருந்தும், மணல் லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனியார் பேருந்து, மணல் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - தனியார் பேருந்து, மணல் லாரி
தேனி: சின்னமனூர் அருகே தனியார் பேருந்து, மணல் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தனியார் பேருந்து, மணல் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
காயமடைந்தவர்களை சகவாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சின்னமனூர் காவல் துறையினர் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!