தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேனி அருகே லிஃப்ட் இயந்திரம் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு! - தேனி மாவட்ட விபத்துச் செய்திகள்

தேனி: வைகை அணை அருகே உள்ள டாடா காபி தொழிற்சாலையில் லிஃப்ட் இயந்திரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லிஃப்ட் இயந்திரம் சரிந்து விழுந்த டாடா காபி தொழிற்சாலை
லிஃப்ட் இயந்திரம் சரிந்து விழுந்த டாடா காபி தொழிற்சாலை

By

Published : Sep 22, 2020, 9:31 PM IST

தேனி மாவட்டம் வைகை அணை அருகேவுள்ள ஜெயமங்கலத்தில் டாடா காபி தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு லிஃப்ட் இயந்திரம் பழுது நீக்கும் பணி வழக்கம்போல இன்று நடைபெற்றது. அப்போது லிஃப்ட் ரோப் அறுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ராட்சத இரும்புக் குழாய் விழுந்ததில் வைகை புதூரைச் சேர்ந்த மெக்கானிக் முருகராஜ் (48) சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் உடனிருந்த பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த காரிஸ்முகமது (36) என்ற தொழிலாளியின் இடுப்பு, இரண்டு கால்கள் முறிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.

இதையடுத்து, அவர், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

லிஃப்ட் இயந்திரம் சரிந்துவிழுந்த டாடா காபி தொழிற்சாலை

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றன. மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஜெயமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: உணவுப்பொருள் தயாரிக்கும் கிடங்கில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details