தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் வனப்பகுதியில் உள்ள வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இந்த சிறுத்தையை மீட்க வனப்பாதுகாவலர் மகேந்திரன் மற்றும் வனப் பணியாளர்களுடன் சம்பயிடத்திற்கு சென்றனர். அப்போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தப்பிய நிலையில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனின் கையை கடித்து தாக்கி விட்டு வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
தேனி அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை - A leopard attacked a forest officer
சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த உதவி வனப்பாதுகாவலர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![தேனி அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை தேனி அருகே வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16490420-thumbnail-3x2-cheeeeeeeee.jpg)
இதனால் காயமடைந்த உதவி வனப்பாதுகாவலர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின்பு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பாக இதே பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்த பொழுது வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இரண்டு இடங்களில் ஒரு மாத காலமாக கூண்டு வைக்கப்பட்டிருந்தும் சிறுத்தை சிக்காத நிலையில் கூண்டு அகற்றப்பட்டது. இதனிடையே மீண்டும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:கும்பகோணத்தில் அதிகாலை முதலே பலத்த கனமழை... 3 மணி நேரத்தில் 101 மி.மீ பதிவு...