தேனி:பெரியகுளம் கைலாசபட்டி பகுதியில் தேனி நடாளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில், அப்பகுதியில் ஆடு மேய்த்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
65 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்ததை அடுத்து அலெக்ஸ் பாண்டியன் விடுதலை செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளிவந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் வெடி வெடித்து மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்நிலையில் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், சிறுத்தை உயிர் இழந்த விவகாரத்தில் தன்னை வனத்துறை அதிகாரிகள் அடித்து தாக்கி துன்புறுத்தியதாகவும், தன்னை சுட்டு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் அலெக்ஸ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.