தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணிதம் கற்பிக்கும் விளையாட்டு; கண்டுபிடித்த டெய்லர் - டெய்லர்

பள்ளி மாணவ- மாணவிகளிடம் கணிதம் மற்றும் ஆங்கில அறிவினை தூண்டும் வகையில் விளையாட்டுடன் கூடிய புதுமையான கற்கும் முறையை கண்டுபிடித்து அதற்கு காப்புரிமையும் வாங்கி வைத்துள்ள டெய்லர் முருகன் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு

கணிதம் கற்பிக்கும் விளையாட்டு
கணிதம் கற்பிக்கும் விளையாட்டு

By

Published : Jul 8, 2022, 7:39 PM IST

தேனி:அல்லிநகரத்தை சேர்ந்தவர் முருகன், தையல் கடை நடத்தி வரும் இவர் தனது சிறு வயதில் பள்ளியில் படிக்கும் சமயத்தில் கணிதம் மற்றும் ஆங்கிலம் சரியாக வராத காரணத்தினால தனது பள்ளி படிப்பினை 10ம் வகுப்போடு நிறுத்தி விட்டு தையல் கலையினை கற்று கொண்டு தையல்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தன்னால் கணிதம் மற்றும் ஆங்கிலம் எதனால் கற்று கொள்ள முடியாமல் போனது என பல முறை யோசித்த பின்னர் தனக்கு ஏற்பட்ட இந்த கஷ்டம் வரும் சந்ததினருக்கு ஏற்பட கூடாது என எண்ணிய அவர் இதற்கு மாற்று வழிமுறைகளை தேர்வு செய்ய முடிவு செய்தார்.

அதாவது பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டின் மூலம் கணிதம், ஆங்கில அறிவினை வளர்க்க முடியும் என என்னினார். அவர் செஸ் விளையாட்டினை முன் மாதிரியாக வைத்து எளிதில் கணிதம் மற்றும் ஆங்கிலம் கற்கும் வகையில் புதுமையான விளையாட்டினை கண்டுபிடிக்க துவக்கினார்.

கணிதம் கற்பிக்கும் விளையாட்டு; கண்டுபிடித்த டெய்லர்

கணிதத்தின் அடிப்படையே கூட்டல், கழித்தல் பெருக்குதல், வகுத்தல் ஆகும். இதனை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இவர் கண்டுபிடித்துள்ள புதுமையான செஸ் போர்டில் 45 கட்டங்கள் உள்ளன. போர்டில் நடுவில் 25 கட்டங்களில் மட்டுமே காயின்கள் நகர்வு இருக்கும், அதற்கு வெளியே 20 கட்டங்களில் கூட்டல், கழித்தல் , பெருக்குதல், வகுத்தலுக்கான விடைகள் 1 முதல் 100 வரை இடம் பெற்றிருக்கும்.

இந்த முறை மூலமாக மாணவ- மாணவிகள் விளையாடிக்கொண்டே கணிதத்தை எளிமையாக கற்க முடியும். இதே போல ஆங்கில அறிவினை வளர்க்கும் வகையில் செஸ் போர்டில் 81 கட்டங்களை உருவாக்கி, அதில் காயின்களை வைத்து ஒவ்வொரு காயின் நகர்த்துதல் மூலமாக புதிய புதிய ஆங்கில வார்த்தைகளை கூறி எதிர்முனையில் விளையாடுபவர்களின் காயின்களை ஆட்டமிழக்கும் முறையினை இவர் கண்டுபிடித்துள்ளார்
சீட்டு கட்டு விளையாட்டின் மூலமாக ஆங்கில அறிவினையும் வளர்க்கும் வகையில் புதுமையான சீட்டுகட்டினையும் இவர் கண்டுபிடித்துள்ளார் முருகன். இந்த விளையாட்டு புதிய புதிய ஆங்கில வார்த்தைகளை எளிதான முறையில் அவர்களை சிந்திக்க வைத்து ஆங்கில அறிவினை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணிதம் கற்பிக்கும் விளையாட்டு; கண்டுபிடித்த டெய்லர்

2 பேர் இணைந்து விளையாடும் வகையில் 54 சீட்டுகளில் நபர் ஒன்றுக்கு 13 சீட்டுகளை கொடுத்தும் அதில் 2 ஜோக்கர் சீட்டுகளை கொடுத்து அதில் குறிப்பிடுள்ள ஆங்கில ஏழுத்துகளுக்கு பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்து விளையாடுவது போன்ற ஆங்கில அறிவினை வளர்க்கும் வகையில் சீட்டுகட்டுகளை இவர் கண்டு வடிவமைத்துள்ளார்.

இவர் தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும், விடுமுறை நாட்களில் மாணவ மாணவிகளுக்கு கற்று கொடுத்து வருகிறார். இவரிடம் இந்த விளையாட்டு கற்று கொண்ட மாணவிகள் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த தேர்ச்சியையும் பெற்று வருவதாக கூறுகின்றனர்.

இதன் மூலம் தங்களின் ஆங்கிலம் பற்றிய தயக்கம் முற்றிலுமாக நீங்கி விட்டதாகவும், வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சிறந்த முறையில் அதிக மதிப்பெண்களை பெற்று வருவதாக கூறுகின்றனர் இந்த விளையாட்டினை விளையாடும் மாணவ மாணவிகள்.

முருகன் தனது அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமையை பெற்று வைத்துள்ளார். தான் கண்டுபிடித்த இந்த விளையாட்டு மூலம் கணிதம் மற்றும் ஆங்கிலம் அனைவருக்கும் எளிதாக புரியும் என்றும், மேலும் இதில் புலமையும் பெறுவார்கள் என்றும், தனது கண்டுபிடிப்புகளை அனைத்து பள்ளிகளில் கொண்டு சேர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் டெய்லர் முருகன். கவனத்தில் எடுத்து கொள்ளுமா தமிழக அரசு? பொறுத்து இருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க:சிபிஎஸ்இ ரிசல்ட் தாமதம் - கல்லூரிக்கு விண்ணப்பிக்க நாள்கள் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details