தேனி மாவட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல் எல்லைகளான தேவதானப்பட்டி காட்ரோடு சோதனைச்சாவடி, ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடி, கேரள மாநில எல்லைகளான லோயர்கேம்ப், முந்தல், கம்பம் ஆகிய சோதனைச்சாவடிகளில் புதிதாக வருபவர்கள் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஆண்டிபட்டி அரளியூத்து சோதனைச்சாவடியில் காவல் துறையினர் நேற்று வழக்கம்போல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேனியிலிருந்து மதுரை நோக்கிவந்த காரை நிறுத்தி காவல் துறையினர் சைகை காட்டியுள்ளனர். ஆனால் காரை நிறுத்தாமல் காவல் துறையினரை இடித்துத் தள்ளுவதுபோல வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனால் அந்தக் காரை பின்தொடர்ந்த காவல் துறையினர் சிறிது தூரத்தில் மடக்கிப்பிடித்தனர். அதன்பின் காரிலிருந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரிக்கையில், காரை ஓட்டிவந்தவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவரும் சாலமன்ராஜா என்பது தெரியவந்தது.