கார்த்திகை தீபம் ஏற்றுவதில் திமுக - ஓபிஎஸ் தரப்பினரிடையே தகராறு தேனி:பெரியகுளம் அடுத்த கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில் திமுக மற்றும் ஓபிஎஸ் குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினையை அடுத்து கோவிலில் கார்த்திகை தீபத்தை அர்ச்சகர் ஏற்றினார்.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தரப்பில் கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தை ஏற்ற ஓபிஎஸ் குடும்பத்தினர் எதிர்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஓபிஎஸ் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதிக்காமல், சமூக நீதியைப் புறக்கணித்ததாகக் குற்றச்சாட்டு கூறியதாகக் கூறப்படுகிறது.
இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஓபிஎஸ் இளைய மகன் ஜெய பிரதீப் அங்கம் வைக்கும் அன்பர் பணிக் குழு தரப்பில் மாவட்ட ஆட்சியர் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "அன்பர் பனிக் குழுவில் பெரியகுளம் பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த அனைத்து சமூகத்தை உள்ளடக்கிய 100-க்கும் மேற்பட்டோர் அங்கம் வகிப்பதாகவும், அதில் செயலாளராகப் பட்டியல் இனத்தவர் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலராக இருப்பவரே இறைப்பணி செய்து வருவதாகவும், கார்த்திகை தீபத்தன்று திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வனுக்குக் கோவிலில் மரியாதை செய்து அவர்களுக்கும் பரிவட்டம் கட்ட அழைத்த போது அவர்கள் வர மறுத்து தீபம் ஏற்றும் இடத்திற்குச் சென்று விட்டதாகவும், இதில் எந்த சமூக நீதியும் புறக்கணிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:எரிசக்தி சேமிப்பு திருத்த மசோதா மீது எம்.பி. வில்சன் வைத்துள்ள பரிந்துரைகள்!