தேனி மதுரை சாலையில் உள்ள தாமரைக்குளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்தனர்.
'தாமரை குளத்தில் இருந்து ஆண்சடலம் மீட்பு'
தேனி: தாமரை குளத்தில் சடலமாக கிடந்தவரை காவல்துறையினர் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர் உயிரிழந்தவர் குறித்து காவல்துறையினர் விசாரித்ததில், தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த விசுவநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கோட்டை கருப்பன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து விசுவநாதபுரம் கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் கோட்டைகருப்பனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரண்டு வாரத்திற்கு முன்பு கோயம்புத்தூருக்கு கொத்தனார் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்றார். ஆனால், அதன்பிறகு அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், தற்போது அவர் இறந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக தெரிவித்தனர். மேலும் யாராவது அவரை கொலை செய்து குளத்தில் வீசியிருக்கலாம் என தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.